ராணி வேலுநாச்சியார் பிறந்தநாளுக்கு சிவகங்கையில் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.
சிவகங்கையில் ராணி வேலுநாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு தேவஸ்தானம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தான அலுவலகத்தில் நடந்த முகாமை தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் துவக்கி வைத்தார்.மகேஷ்துரை முன்னிலை வகித்தார்.
மன்னர் பள்ளிகளின் செயலாளர் குமரகுரு, தேவஸ்தான மேலாளர் இளங்கோவன், அரசு மருத்துவமனை டீன் ரேவதி, லயன்ஸ் சங்க நிர்வாகிகள் உட்பட தேவஸ்தான ஊழியர்கள், மன்னர் பள்ளிகளின் ஆசிரியர்கள் பங்கேற்றனர். முகாமில் ரத்ததானம் செய்தவர்களுக்கு மதுராந்தகி நாச்சியார் சான்று வழங்கினார். அரசு மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர்கள், நர்சுகள் ரத்தவங்கிக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.