• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கனமழையால் ரயில்வே சுரங்க பாதையில் பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து..!

ByKalamegam Viswanathan

Oct 12, 2023

மதுரையில் நேற்று இரவில் கொட்டித்தீர்த்த கனமழையால், ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சுற்றுலா பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
மதுரை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் என பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது. இதனால் மாநகரில் கோரிப்பாளையம், அண்ணாநகர், தல்லாகுளம், பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், பொன்மேனி, பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரையின் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கி காணப்பட்டது. குறிப்பாக ராஜாமில் ரயில்வே கர்டர் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரால் அவ்வழியை கடக்க முயன்ற கேரளாவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து நள்ளிரவில் 3.30 மணிக்கு சிக்கி பழுதாகி உள்ளது. இதில் பேருந்தில் பயணித்த பெண்கள் குழந்தை உள்பட 40 பேர் பேருந்தின் உள்ளேயே சிக்கி அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து காலையில் மழைநீர் வடிந்த நிலையில் பேருந்தை மீட்க ஜே.சி.பி உதவி கொண்டு பாதையில் இருந்து அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.