• Mon. May 6th, 2024

சோழவந்தானில் கனமழை – வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில்.., அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வயதான தம்பதியர்..!

ByKalamegam Viswanathan

Oct 12, 2023
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மலையின் பாதிப்புகள் ஆங்காங்கே ஏற்பட்டு வரும் நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக இரவு நேரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சோழவந்தான் ஆர் சி ஸ்கூல்  எதிரில் உள்ள வண்ணான் தெருவில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்ததில் வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக  கணவனும் மனைவியும் உயிர்தப்பினர். வண்ணான் தெருவை சேர்ந்த யோசனை வயது 60 அவரது மனைவியை சித்ரா வயது 55 இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இருவரும் திருமணம் ஆகி சென்ற பின்பு கணவன் மனைவி மட்டும் வீட்டில் தனியாக வசித்து  வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்த போது நடு இரவு 12 மணிக்கு மேல் மடமடமென்று சத்தம் கேட்டதில் இருவரும் அலறி அடித்துக் கொண்டு எழுந்து பார்த்ததில் வீட்டின் கிழக்குப் பகுதியில் இருந்த மதில் சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் வெளிப்புறமாக விழுந்த சுவர் உள்புறமாக விழுந்து இருந்தால் இருவரும் உயிரிழந்திருக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கும். இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவரும் வெளியே வந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை  உதவிக்கு கூப்பிட்டு உடனடியாக மின்சார  வாரியத்திற்கு தகவல் கொடுத்து  மின்சாரத்தை துண்டிக்க செய்தனர். மேலும் இடிந்து விழுந்த சுவர் ஆனது மிகவும் பழமையான சுவர் என்பதால் மிச்சம் இருக்கும் சுவரும் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். ஆகையால் அதிகாரிகள் இடிந்து விழுந்த மதில் சுவரை நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் வீடு கட்ட உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தை கேள்விப்பட்ட வார்டு கவுன்சிலர் நிஷா கௌதம ராஜா பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *