• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நாளை விநாயகர் சதுர்த்தி.. பூஜை செய்ய உகந்த நேரம் இதுதான்..!

ByA.Tamilselvan

Aug 30, 2022

விநாயகர் அவதரித்த ஆவணி 15-ம் நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நாளை (ஆக.31ம் தேதி) வருகிறது.
பொதுவாக எந்த ஒரு சுப காரியத்தை தொடங்குவதற்கு முன் வினை தீர்க்கும் விநாயகரை வழிபட்டு தான் தொடங்க வேண்டும் என்பது இந்து மதத்தின் நம்பிக்கை. அதன்படி, இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நாளின் பிள்ளையாரை வழிபடுவதற்கான சுப முகூர்த்த நேரம் நாளை (31-ம் தேதி) காலை 11.04 மணி முதல் மதியம் 01.37 வரை ஆகும்.
இந்த சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள். இந்த நாளில், கேட்ட வரத்தை விநாயகர் அள்ளி கொடுப்பார் என்பது காலம் காலமாக இந்து மக்களின் நம்பிக்கை ஆகும்.