• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விண்வெளியில் விளைந்த தக்காளி பூமியில் வருகிறது

ByA.Tamilselvan

Apr 16, 2023

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்ட மினியேச்சர் கிரீன்ஹவுஸ் ஆய்வுக் கூடம் ஒன்றில் விளைவிக்கப்பட்ட தக்காளிகள் பூமிக்கு கொண்டுவரப்படுகின்றன.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பூமிக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த ஆண்டு நிலவில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரியை கொண்டு செடியை வளர்த்து விஞ்ஞானிகள் அசத்தி இருந்தனர். நாசா மற்றும் புளோரிடா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது விண்வெளியில் ஆராய்ச்சி ரீதியாக தக்காளி விளைவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்ட மினியேச்சர் கிரீன்ஹவுஸ் ஆய்வுக் கூடம் ஒன்றில் விஞ்ஞானிகள் தக்காளியை விளைவித்துள்ளனர். இது குட்டை ரக தக்காளி என நாசா தெரிவித்துள்ளது. சுமார் 100 நாட்களுக்கு மேல் தக்காளி அங்கு பயிர் செய்யப்பட்டுள்ளது. முறையே 90, 97 மற்றும் 104-வது நாட்களில் தக்காளி அறுவடை செய்யப்படுள்ளது. அதை பதப்படுத்தி அதன் ஊட்டச்சத்து சார்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது எதிர்வரும் காலத்தில் நீண்ட கால விண்வெளி பயணத்தின் போது ப்ரெஷ் உணவு பெற உதவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு என நாசா தெரிவித்துள்ளது.