• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

நாளை பாரத் பந்த்..??? வெளியான அறவிப்பு…

Byகாயத்ரி

May 24, 2022

ஓபிசி சமூகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்திற்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூக ஊழியர்கள் சம்பளம் நடத்துகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை அந்தந்த சமூகங்கள் வாரியாக எடுத்தால் மட்டுமே அவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உள்ளிட்டவற்றில் இட ஒதுக்கீடு சரியாக கிடைக்கும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே குறிப்பிட்ட சாதிகளை தாழ்த்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நீண்டகாலமாக நடத்தாமல் புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ஓபிசி கணக்கெடுப்பை நடத்த கோரி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை சமூக ஊழியர்கள் சம்பளம் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த பாரத் பந்த் போராட்டத்தில் என்னவெல்லாம் இயங்கும், இயங்காது என்பது குறித்த அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.