தக்காளி விலை உயர்வு எதிரொலியால் மெக்டெனால்ட் என்கிற உணவு நிறுவனத்தில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு தக்காளியைப் பயன்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ளது.
பிரபலமான உணவு நிறுவனமான மெக்டொனால்ட் இனி தங்கள் உணவுகளில் தக்காளியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மெக்டொனால்ட் கடைகளில் உள்ள பர்கர்கள் மற்றும் ரேப்களில் இருந்து தக்காளியை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்குள் தக்காளி விலை வரலாறு காணாத அளவில் ரூ.250ல் இருந்து ரூ.300 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தரமான தக்காளி கிடைப்பதில்லையாம். இதன்காரணமாக புதுடெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள மெக்டொனால்டு கடைகளுக்கு தக்காளியை நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தமிழ்நாட்டில் காய்கறி சந்தையில் இன்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று கிலோவிற்கு ரூ.30 உயர்ந்ததால், மீண்டும் ரூ. 120க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளிலும், ரேஷன் கடைகளிலும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. இது சென்னையில் மட்டும் நடைமுறையில் இருப்பதால், மற்ற மாவட்ட மக்கள் விலை உயர்வால் வேதனைப்படுகின்றனர்.
தக்காளி விலை உயர்வு எதிரொலி.., மெக்டொனால்ட் உணவு நிறுவனத்தில் தக்காளிக்கு தடை..!
