ஹெச்.டி.எப்.சி வங்கி மீண்டும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருவது வங்கி வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
ஹெச்.டி.எப்.சி வங்கி இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக மாறியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கடனுக்கான வட்டி விகிதத்தை ஹெச்.டி.எப்.சி வங்கி உயர்த்திய நிலையில் தற்போது மீண்டும் கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நிதி அடிப்படையிலான கடன் விகிதங்களின் செலவு 15 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
ஒரு நாள் முதிர்வு கால கடன்களுக்கான வட்டி விகிதம் 15 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 8.10சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து ஒரு மாத கடனுக்கான வட்டி விகிதம் 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 8.30சதவிதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று மாத கடனுக்கு 8.6சதவீதம், ஆறு மாத கடனுக்கு 8.9சதவீதம் மற்றும் ஒரு வருட கடனுக்கு 9.05சதவீதம் என வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.