

கடந்த இரு நாட்களாக தங்கம் விலை சரிந்து வந்தநிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,800க்கும், சவரன் ரூ.38,400க்கும் விற்கப்பட்ட நிலையில், புதன்கிழமையான இன்று காலை திடீரென உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் ஏற்றம் கண்டு, ரூ.4,805 ஆகவும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.38,440ஆகவும் விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த 16ம் தேதி முதல் தங்கம் விலை குறையத் தொடங்கியது. இதுவரை சவரனுக்கு ரூ.900க்கும் மேல் சரிந்தது. இதனால் தங்கம் வாங்கும் மக்கள் மத்தியில் ஆர்வம் தொற்றிக்கொண்டது.38,400க்கும் விற்கப்பட்டது. ஆனால், கடந்த 2 நாட்களுக்குப்பின் தங்கத்தின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டு இன்று உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 20 பைசா அதிகரித்து, ரூ.60.90 ஆகவும், கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.60,900க்கும் விற்கப்படுகிறது.
