• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

இன்று இமாச்சல பிரதேச முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்கிறார்

ByA.Tamilselvan

Dec 11, 2022

இமாச்சல பிரதேச 40 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக இன்று சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்கிறார்.
இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு நடந்த தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 75.6 சதவீத வாக்குகள் பதிவாகின. 68 இடங்களில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் அமோக வெற்றி பெற்றது குஜராத்தில் சாதனை வெற்றி பெற்ற பா.ஜ.க. இங்கு ஆட்சியைப் பறிகொடுத்தது. இங்கு 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கிறது. ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தௌன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுக்விந்தரை முதலமைச்சராக கட்சித் தலைமை நேற்று அறிவித்தது. இந்நிலையில், சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சுக்விந்தர் சிங் சுகு முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அதன்படி இன்று காலை சுக்விந்தர் சிங் சுகு முதலமைச்சராக பதவியேற்கிறார்.