குஜராத் மற்றும் இமாச்சலபிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்று மதியத்திற்கு வெற்றியாருக்கு என தெரிந்துவிடும்.
குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அந்தவகையில் 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ந்தேதியும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 5-ந்தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள 37 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
68 இடங்களைக்கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.
தற்போது வரை காங்கிரஸ் , பாஜக இரண்டு கட்சிகளும் மாறி, மாறி முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆட்சியமைக்கப்போவது யார் என மதியத்திற்குள் தெரிந்துவிடும். மாலைக்குள் முழுமையான முடிவுகள் வெளிவரும் எனத்தெரிகிறது.