பிரபஞ்சன் ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் 1995 ஆம் ஆண்டு, தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.புதுச்சேரியில், 1945, ஏப்ரல் 27ல் பிறந்தார் இயற்பெயர், சாரங்கபாணி வைத்தியலிங்கம்.
தஞ்சாவூர் கரந்தை கல்லுாரியில், புலவர் பட்டம் பெற்றார். தஞ்சாவூரிலேயே, ஆசிரியராக பணியாற்றினார்.எழுத்து மீதான ஆர்வத்தில், ஆசிரியர் பணியில் இருந்து விலகி, ‘குமுதம், ஆனந்த விகடன், குங்குமம்’ ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார்.சிறுகதை, நாவல், கட்டுரை என, 46க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார்.
இவரின், ‘வானம் வசப்படும்’ நாவல், சாகித்ய அகாடமி விருது பெற்றது.இவரது படைப்புகள் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் ஸ்வீடிஷ் மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. பல்வேறு பல்கலைகளின் பாடத் திட்டத்தில், இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2018, டிசம்பர் 21ல் தன் 73வது வயதில் உயிரிழந்தார்.எழுத்தாளர் பிரபஞ்சன் காலமான தினம் இன்று!