• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வயலின் இசை கலைஞர் துவாரம் வேங்கடசாமி காலமான தினம் இன்று!

Byகாயத்ரி

Nov 25, 2021

1893 நவ.,8இல் பிறந்தவர் துவாரம் வேங்கடசாமி. 20ஆம் நூற்றாண்டின் சிறந்த கர்நாடிக் வயலின் வாசிப்பாளர் இவர். பார்வைத் திறன் குறைவாக இருந்ததால், பள்ளி படிப்பை கைவிட்டார். தன் மூத்த சகோதரர் வெங்கடகிருஷ்ணரிடம், முறைப்படி வயலின் கற்றுக் கொண்டார். 1919-ல், விஜயநகரம் மகாராஜா இசைக் கல்லுாரியில் மாணவராக சேர விண்ணப்பித்தார்.

நேர்முகத் தேர்வில் இவரது வாசிப்பை கேட்ட கல்லுாரி நிர்வாகத்தினர், பேராசிரியராக நியமித்தனர். 1936ல், அக்கல்லுாரியின் முதல்வரானார்.காஞ்சிபுரம் நாயனார், அரியக்குடி ராமானுஜர், பல்லடம் சஞ்சீவர், முசிறி சுப்ரமணியர் போன்றோரின் கச்சேரிகளுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார். அகில இந்திய வானொலி இசைக் கச்சேரிகளிலும் பங்கு பெற்றார்.’

பத்மஸ்ரீ, சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி’ உட்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். இசை குறித்து பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 1964 நவ.,25ல் தன் 71வது வயதில் காற்றில் கலந்தார். சங்கீத கலாநிதி வயலின் இசை கலைஞர் துவாரம் வேங்கடசாமி காலமான தினம் இன்று!