• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உமையாள்புரம் காசிவிஸ்வநாத சிவராமன் பிறந்த தினம் இன்று!

Byகாயத்ரி

Dec 17, 2021

ஒரு மிருதங்க வாசிப்பாளராக இவ்வுலகிற்கு அறிமுகமானவர் உமையாள்புரம் காசிவிஸ்வநாத சிவராமன். அருபதி நடேசன், தஞ்சாவூர் வைத்தியநாதன், பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், கும்பகோணம் ரங்கு ஆகியோரிடம் இவர் இசைப்பயிற்சி பெற்றார்.

சிவராமன் தனது பத்தாவது வயதில் முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். மிருதங்க வாசிப்பில் புதிய உத்திகள், புதுமைகளைப் புகுத்தியவர்.வட இந்திய இசைக்கலைஞர்களுடன் ஜுகல்பந்தி என்ற நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தியவர்.

சிவராமன் மிருதங்கக் கலையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். முதன்முதல் இழைக்கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட மிருதங்கத்தை அறிமுகப்படுத்திய இவர், பதனிட்ட தோல், பதனிடாத தோல் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மிருதங்கங்களை தனித்தனியே ஆராய்ச்சி செய்துள்ளார். இவர் வாங்காத விருதுகளும் இல்லை கலை உணர்வுக்கு பஞ்சமும் இல்லை.

மாநில இசைக்கலைஞர் விருது, சங்கீத கலாசிகாமணி விருது, பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது, தேசிய குடிமகன் விருது, பத்ம பூசண் விருது, பத்ம விபூசண் விருது என பல உயரிய விருதுகள் இவர் வசம்.இத்தகைய மாபெரும் அறிஞர் உமையாள்புரம் காசிவிஸ்வநாத சிவராமன் பிறந்த தினம் இன்று!