• Thu. Jun 1st, 2023

சாரு நிவேதிதா பிறந்த தினம் இன்று..!

Byகாயத்ரி

Dec 18, 2021

தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர் சாரு நிவேதிதா. இவர் 18 டிசம்பர் 1953ல் பிறந்தார்.மிக பரந்த வாசகர் பரப்பை கொண்டவர். அமைப்பை விட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன.

அடுத்த மனிதரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்காமலும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்ற கருத்தை முன்வைப்பவை சாரு நிவேதிதாவின் படைப்புகள். இவரது எழுதிய நாவல் ஸீரோ டிகிரி, சுவிட்சர்லாந்தின் யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு 2013-ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது.

எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ், 2001 – 2010 தசாப்தத்தின் இந்தியாவின் முதன்மை பத்து மனிதர்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்தது. தி இந்து தனது தீபாவளி மலரில், தமிழகத்தின் மனதில் பதிந்த முகங்களில் ஒருவராக 2014-ஆம் ஆண்டு இவரைத் தேர்ந்தெடுத்தது. இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், மலையாள மொழிபெயர்ப்பில் வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ் தவிர ஆங்கிலத்திலும் உலக அளவில் இவரது எழுத்துக்கு வாசகர்கள் உண்டு.இந்த எழுத்துக்களின் நாயகனாக இருக்கும் சாரு நிவேதிதா பிறந்த தினம் இன்று..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *