• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இந்த நாள்

Byகாயத்ரி

Feb 12, 2022

தத்துவவாதி தயானந்த சரசுவதி சுவாமிகள் பிறந்த தினம் இன்று..!

தத்துவவாதியாகவும், இந்து சமயத்தின் தீவிரச் சிந்தனையாளராகவும் இருந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் தயானந்த சரசுவதி சுவாமிகள். குஜராத் மாநிலத்திலுள்ள டங்காரா கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மூல்சங்கர். இவருக்குத் தொடக்கக்கல்வி ஏதும் அளிக்கப்படவில்லை. இவருக்கு வீட்டில் வைத்து சமற்கிருதம், மதக் கருத்துக்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இவர் தண்டி சுவாமி பூர்ணானந்த் என்பவரிடமிருந்து கமண்டலம் மற்றும் தண்டம் பெற்றுத் துறவியாக மாறினார். அன்றிலிருந்து தயானந்த சரசுவதி என அழைக்கப் பெற்றார். யோகா மற்றும் தந்திரங்களைக் கற்றுத் தேர்ந்த இவர் 1837 ஆம் ஆண்டில் கடவுளின் உருவ வழிபாடுகளின் மீதான நம்பிக்கையை இழந்தார். வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று நம்பினார். அதன் பின்பு சமயத்தின் பெயரால் நடக்கும் ஏமாற்று வேலைகள், மோசடிகள் போன்றவைகளை மக்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினார். இந்து, கிறித்தவ, இசுலாமிய சமய சாத்திர அறிஞர்களிடம் தர்க்கம் செய்து பல கருத்துகளை எடுத்துரைத்தார். இந்நிகழ்வுகள் அனைத்திலும் இவர் வெற்றியடைந்தார். 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமய சீர்திருத்த இயக்கங்களில் முக்கியமான ஆரிய சமாஜ இயக்கத்தினை நிறுவியவர். தத்துவவாதி தயானந்த சரசுவதி சுவாமிகள் பிறந்த தினம் இன்று..!