• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பிறந்த தினம் இன்று..!

Byகாயத்ரி

Nov 26, 2021

ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் என்பவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரசராக 1886 முதல் 1928 மே 28 வரை ஆட்சிசெய்தவர். ஆஸ்திரேலிய பெண்மணி மோலி பிங்கை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் ஆங்கிலேய அரசு இவரை பதவியில் இருந்து நீக்கியது. இவரது இயற்பெயர் மார்த்தாண்ட பைரவ பல்லவராயர்.

இவர் பல்லவராயர் பரம்பரையை சேர்ந்தவர். நவம்பர் 26, 1875 அன்று புதுக்கோட்டை இளவரசி ராஜாமணி சாஹிப் மற்றும் அவரது கணவர் எம்.ஆர்.ஆர். குழந்தைசாமி பல்லவராயர் சாஹிப் அவர்களுக்கு மூன்றாவது மகனாக பிறந்தார்.

சிறு வயதிலேயே, மன்னர் இராமச்சந்திர தொண்டைமான் அவர்களால் தத்தெடுக்கப்பட்டார்.இவரது ஆட்சிக்காலம் 15 ஏப்ரல் 1886 முதல் 28 மே 1928 வரை.ஒரு சாம்ராஜ்யத்தின் ஆட்சி பொறுப்பில் இருந்த மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பிறந்த தினம் இன்று..!