• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ராதா பர்னியர் பிறந்த தினம் இன்று…

Byகாயத்ரி

Nov 15, 2021

1980 முதல் 2013இல் தன் இறப்பு வரை சென்னை பிரம்மஞானசபையின் தலைவியாராகவும் அடையாறு நூலகத்தில் இயக்குநராகவும் இருந்தவர் ராதா பர்னியர். இவரது பூர்வீகம் குடந்தைக்கு அருகில் உள்ள திருவிசைநல்லூர் ஆகும். இவர் சென்னை பிரம்மஞானசபை வளாகத்தில் பிறந்தார்.

பிரம்ம ஞானசபையின் தலைவர்களாக இருந்த ஜார்ஜ் அருண்டேலும், இவரது தந்தை ஸ்ரீராம் ஆகியோர் இவரது இளமைக்காலத்தில் இவருக்கு பிரம்ம ஞான உணர்வுகளை ஊட்டினர். மயிலாப்பூரில் பள்ளிக்கல்வி கற்றதுடன் காசி இந்து பல்கலைக்கழகத்தில் கற்று வடமொழியில் முதுகலைப் பட்டம் பெற்றார். பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாய் தேர்ச்சிபெற்றார்.

கலாசேத்திரத்தில் சேர்ந்து நடனம் பயின்று, பட்டம் பெற்ற முதல் மாணவி இவராவார்.இவர் ஒரு எழுத்தாளர்., நடிகை மற்றும் நூலாசிரியரும் கூட. இப்படி பல திறமைகளை உள்ளடக்கிய ராதா பர்னியர் பிறந்த தினம் இன்று…