• Sat. Apr 27th, 2024

உத்தரபிரதேசத்துக்கு ஒரு நியதி தமிழகத்துக்கு ஒரு நியதியா?:மதுரை எம்.பி ஆவேசம்

மதுரையை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதில் மத்திய அரசு மாற்றான் தாய் மனபான்மையுடன் நடந்துகொள்ளவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் மதுரை எம் பி சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “நாங்கள் உண்மைக்கு மாறாக பேசவேண்டிய தேவையில்லை. ஏனெனில் தேவைக்கு அதிகமாகவே எங்களிடம் உண்மைகள் இருக்கின்றன.
மதுரையில் இருந்து கூடுதலான சர்வதேச விமானங்களை இயக்குவோம் எனச் சொல்லும் அமைச்சர் “மதுரையை சர்வதேச விமானநிலையம் ஆக்குவோம்” என்று மட்டும் சொல்ல மறுக்கிறார். அது தான் பிரச்சனையின் மையப்புள்ளியே மதுரையில் இருந்து ஏற்கனவே வெளிநாடுகளுக்கு விமானங்கள இயக்கப்படுகின்றன.

அப்படியிருக்க அதனை சர்வதேச விமானநிலையம் என அறிவித்தால் தான் செல்லுமா? என்று கேட்கிறார். பிறகு என்ன பிரச்சனை. அறிவிக்க வேண்டியதுதானே? என்றால் அதற்கு பதில் இல்லை. உ பி யில் 2021 அக்டோபரில் குஷிநகர் சர்வதேச விமானநிலையத்தை திறக்கிறீர்கள். நவம்பர் மாதம் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறீர்கள். அடுத்த ஆண்டே அயோத்தியில் துவக்கப்படும் என அறிவிக்கிறீர்கள்.

உத்தரபிரதேசத்துக்கு என்ன அளவு கோல்? தமிழகத்துக்கு என்ன அளவு கோல்? 4. வாரணாசி & குஷிநகரில் இருந்து பயணப்பட்ட பன்னாட்டுப்பயணிகளின் எண்ணிக்கையை விட மதுரையிலிருந்து பயணப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை மூன்றுமடங்கு அதிகம். நாட்டிலுள்ள 10 சர்வதேச விமானநிலையத்திலிருந்து பயணப்பட்ட பயணிகளைவிட மதுரையிலிருந்து பயணப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை அதிகம்.


அரசு இன்னும் எத்தனை விமான நிலையங்களையும் திறக்கத் தயாராக இருக்கிறது என்று கூறும் அதே வேகத்தோடு மதுரையை சர்வதேச விமானநிலையமாக அறிவியுங்கள். வரவேற்க தயாராக இருக்கிறோம். நாங்கள் உண்மைக்கு மாறாக பேசவேண்டிய தேவையில்லை. ஏனெனில் தேவைக்கு அதிகமாகவே எங்களிடம் உண்மைகள் இருக்கின்றன.என அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *