

இன்று ஜூன் 21. ஆண்டின் மிக நீண்ட பொழுது நாளாகும். இந்த நாளில் தான் உலக யோகா தினம் அமைய வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஐ.நா சபையில் முன் மொழிந்தார். உலகின் மிக நீண்ட பகல் பொழுது நாள். அதாவது சூரியன் விரைவில் உதயமாகி, மிகவும் தாமதமாக சூரியன் அஸ்தமிக்கும். இந்த நாளைத்தான் சம்மர் ஸால்ஸ்டிஸ் என அழைக்கின்றோம். 2014ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம், மைசூரு அரண்மனையில் நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்தியாவில் இன்று 75 நகரங்களில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மொத்தம் 15 ஆயிரம் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.