• Tue. Feb 3rd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

நீலகிரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் மாலை வரை கடும் மேகமூட்டத்துடன் கூடிய தொடர் சாரல் மழை…வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் மாலை வரை கடும் மேகமூட்டத்துடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. கடும் மேகமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கி வருகின்றனர்.மேலும் தொடர் மழையின் காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டள்ள நிலையில் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.