• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை

தொடர் மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளித்து திருப்பத்தூர் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்னாமலை, உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் (வெள்ளிக்கிழமை) வரை மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தொடர்மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.