• Fri. Apr 19th, 2024

உக்ரைனுக்கு தேவையான மருத்துவ உதவி செய்ய..,
மத்திய அரசு முடிவு..!

Byவிஷா

Mar 1, 2022

உக்ரைன் இந்திய அரசாங்கத்திடம் உதவி கேட்டுள்ளதால், நிவாரண பொருட்கள் அனுப்பும் மத்திய அரசின் முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் இந்த குடிமக்களை மீட்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு, உக்ரைனின் நகரங்கள் மற்றும் எல்லை பகுதிகளில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் குடிமக்களை மீட்கும் பணிகள் குறித்து மேற்பார்வையிட நான்கு மத்திய அமைச்சர்களை அனுப்ப மத்திய அரசு நேற்று முடிவு செய்தது.
இந்த மீட்பு பணிகளில் இந்திய மாணவர்கள் மட்டுமல்லாமல், அண்டை மற்றும் வளரும் நாடுகளை சேர்ந்த மாணவர்களை அழைத்து வர கூடுதல் விமானங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. மேலும் மனிதாபிமானத்தின் அடிப்படையில், உக்ரைனுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைனில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் பாதுகாப்பாக இருப்பதையும், அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதையும் உறதி செய்வதற்காக அரசு இயந்திரம் 24 மணிநேரமும் தீவிரமாக பணியாற்றி வருவதாக பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து இந்திய குடிமக்களை மீட்கும் நடவடிக்கையாக உக்ரைனுக்கு மேற்கே உள்ள இரு அண்டை நாடுகளான ருமேனியா பிரதமர் நிக்கோலே-ஐயோனல் சியுகா மற்றும் ஸ்லோவாக் குடியரசின் பிரதமர் எட்வார்ட் ஹெகர் ஆகியோரிடமும் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். தொலைபேசியில் நடைபெற்ற இந்த அலோசனையில், “நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் உக்ரைனில் நடந்து வரும் வன்முறை மற்றும் மனிதாபிமானமற்ற செயல் குறித்தும் பிரதமர் மோடி வேதனை தெரிவித்ததாகவும், போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கான இந்தியாவின் நிலையான வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்தியதாகவும் கூறியுள்ள பிரதமர் அலுவலகம் “உக்ரைனின் எல்லைகளில் நிலவும் அசாதாரன சூழ்நிலையைச் சமாளிக்க உக்ரைனுக்கு நிவாரணப் பொருட்களை நாளை அனுப்பப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் நடுநிலையாக இருந்த போதியும், உக்ரைன் இந்திய அரசாங்கத்திடம் உதவி கேட்டுள்ளதால், நிவாரண பொருட்கள் அனுப்பும் இந்திய அரசின் முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உக்ரைனில் இருந்த 20,000 இந்திய குடிமக்கள் இருந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற முதல் ஆலோசனைக்கு பிறகு சுமார் 8,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 12,000 இந்தியர்கள் உக்ரைனில் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் உக்ரைனில் தற்போது உள்ள குடிமக்களில் பெரும்பாலானோர் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் குடிமக்களை மீட்கும் பணிகள் தொடர்பாக கண்கானிக்க, ஹர்தீப் பூரி, கிரண் ரிஜிஜு, ஜோதிராத்திய சிந்தியா மற்றும் ஜெனரல் (ஓய்வு) வி கே சிங் ஆகிய 4 மத்திய அமைச்சர்களை உக்ரைனுக்கு அனுப்ப முடிவு செயயப்பட்டுள்ளது. இதில் ஹர்தீப் பூரி ஹங்கேரிக்கும் ரிஜிஜு ஸ்லோவாக்கியாவுக்கும், சிந்தியா ருமேனியா மற்றும் மால்டோவாவுக்கும் பார்ப்பார், சிங் போலந்துக்கும் செல்ல இந்திய அரசின் சிறப்புத் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா, அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா மற்றும் பிற மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மத்திய அமைச்சர்கள் 4 பேர் சிறப்பு தூதர்களாக நியமிக்கப்பட:டள்ள நிகழ்வு, உக்ரைனில் இருந்து மக்களை மீட்கும் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் அலுவலகம், இந்த முயற்சி அரசாங்கம் இணைக்கும் முன்னுரிமையின் பிரதிபலிப்பாகும், ”என்று கூறியுள்ளது. “உலகம் ஒரே குடும்பம் என்ற இந்தியாவின் குறிக்கோளால் வழிநடத்தப்பட்டு, உகரைனில் சிக்கித் தவிக்கும் அண்டை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளை சேர்ந்த மக்களுக்கும் இந்தியா உதவும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
ஆப்ரரேஷன் கங்கா என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில், ருமேனியாவில் உள்ள புக்கரெஸ்ட் மற்றும் ஹங்கேரியின் புடாபெஸ்ட் ஆகிய இடங்களுக்கு இதுவரை, ஏர் இந்தியா டெல்லி மற்றும் மும்பையில் இருந்து ஆறு விமானங்களை இயக்கப்பட்டு 1,396 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் குடிமக்களை மீட்டெடுக்க இந்த இரண்டு விமான நிலையங்களுக்கும் குறைந்தது எட்டு விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் கூடுதலாக, போலந்தில் உள்ள வார்சாவிற்கும் விமானங்கள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளன.
தற்போதைய திட்டத்தின்படி இன்று (செவ்வாய்கிழமை) புக்கரெஸ்டில் இருந்து ஒரு விமானமும், நாளை (புதன்கிழமை) அங்கிருந்து இரண்டு ஏர் இந்தியா விமனங்களையும் இயக்க வாய்ப்புள்ளது. ஏர் இந்தியா குழும விமானத்தை தொடர்ந்து, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் ஐரோப்பாவிற்கு தங்கள் விமானங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பணியின் ஒரு பகுதியாக இண்டிகோ நிறுவனம் இஸ்தான்புல் வழியாக புக்கரெஸ்ட் மற்றும் புடாபெஸ்டுக்கு விமனங்களை அனுப்பியது.
இதேபோல், ஸ்பைஸ்ஜெட் விமானமும் திங்கள்கிழமை டெல்லியில் இருந்து புடாபெஸ்டுக்கு விமானத்தை அனுப்பியுள்ளது. இந்த விமானம் புதன்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு டெல்லி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 189 இருக்கைகள் கொண்ட போயிங் 737 மேக்ஸ் விமானத்தில் இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானம், ஜார்ஜியாவில் உள்ள கடைசியில் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்படும்.

இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “ஸ்பைஸ்ஜெட் மேலும் வெளியேற்ற விமானங்களை இயக்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக கூறியுள்ளது. பல இந்திய மாணவர்கள் போலந்து மற்றும் ருமேனியா எல்லையில் உள்ளனர். அந்த மாணவர்களில் சிலர் உதவி கேட்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. “நாங்கள் மேற்கு உக்ரைனுக்குச் செல்ல இந்தியர்களை ஊக்குவிக்கிறோம்… ஆனால் அவர்கள் நேரடியாக எல்லைகளை அடைய முடியாது. அவர்கள் முதலில் அருகிலுள்ள நகரங்களுக்குச் சென்று தஞ்சம் அடைய வேண்டும்” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார்.
உக்ரைனின் கிழக்குப் பகுதிகளான கார்கிவ் போன்றவற்றின் நிலைமையை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக கூறிய அவர், மேற்கு உக்ரைனில் உள்ள உஸ்ஹோரோடில் இருந்து புடாபெஸ்ட் வரை மாணவர்களை மீட்பதற்கு மால்டோவா வழியாக ஒரு புதிய பாதையும் அடையாளம் காணப்பட்டுள்ளது, ஆனால் கீவில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளதாக பாக்சி கூறியுள்ளார்.
இந்நிலையில், கியேவில் உள்ள இந்திய தூதரகம் கூறுகையில், “உக்ரேனிய பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இருவரும், இந்திய குடிமக்களை வெளியேற்றும் முயற்சிகளை எளிதாக்குவதில் குறிப்பிடத்தக்க வகையில் ஆதரவளித்து வருகின்றனர், குறிப்பாக இந்த நெருக்கடியான மற்றும் ஆபத்தான காலங்களை கருத்தில் கொண்டு. நீங்கள் அனைவரும் இந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *