• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

வார்னர் மியூசிக் இந்தியா நிறுவனத்துடன் இணைகிறது டிவோ நிறுவனம்

Byதன பாலன்

Feb 10, 2023

வார்னர் மியூசிக் இந்தியா ( Warner music India) நிறுவனம், டிவோ (Divo) நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது சம்பந்தமாக
வார்னர் மியூசிக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஜெய் மேத்தா கூறுகையில்,

“வார்னர் மியூசிக் இந்தியா” பேனரின் கீழ் டிவோ பிராண்டைக் கொண்டு வர முடிந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நடவடிக்கை இந்தியநாட்டின் தென்னிந்திய பகுதியில் எங்கள் நிறுவனத்தை வலுப்படுத்தும். இந்தியாவில் எங்கள் நிறுவனம் மிகப்பெரும் வளர்ச்சியடைய, டிவோவின் விரிவான போர்ட்ஃபோலியோ உதவும். தென்னிந்தியாவில் எங்களின் இசையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் கலைஞர்களுக்கான அடையாளமும், இசை சூழலும் மிகப்பெரும் அளவில் மேம்படுத்தப்படும்”.

வார்னர் ரெக்கார்ட் மியூசிக், தலைவர் அல்போன்சோ பெரஸ் சொடோ ( Alphonso Perez Soto ) கூறுகையில்,

“டிவோ” நிறுவனத்தை எங்களுடன் இணைத்தது எங்களது இந்திய இசைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல். 2020 ஆம் ஆண்டில் வணிகத்திற்காக இதை நாங்கள் ஆரம்பித்தோம், மேலும் தொடர்ச்சியான ஒப்பந்தங்கள் மற்றும் கலாச்சார ரீதியாக தொடர்புடைய கலைஞர்களின் படைப்புகள் மூலம் சந்தையில் ஒரு முக்கிய போட்டியாளராக எங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளோம். நான்கு மாநில இசைச் சந்தைகளில் செயல்படும் ஒரு அற்புதமான நிறுவனத்தை உருவாக்கிய டிவோவில் உள்ள ஷாஹிர் மற்றும் விசு மற்றும் குழுவுடன் கூட்டாளியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து, தென்னிந்திய இசையை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்வோம்” என்றார்