• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

நவ.17ல் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா தொடக்கம்..!

Byவிஷா

Nov 14, 2023

நினைத்தாலே முக்தி அளிக்கும் தலமான திருவண்ணாமலையில், நவம்பர் 17ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது.
அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் 17 நாட்கள் தொடர்ச்சியாக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டும் காவல்தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் இன்று மாலை தொடங்க உள்ளது. இதனையடுத்து அண்ணாமலையார் கோயிலில் தங்கக்கொடி மரத்தில் நவம்பர் 17ம் தேதி அதிகாலை 4.45 மணி முதல் 6.12 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதன் பிறகு, பஞ்சமூர்த்தி களின் 10 நாள் உற்சவம் தொடங்கி காலை மற்றும் இரவு நடைபெறும். நவம்பர் 22ம் தேதி காலை 63 நாயன்மார்களின் உற்சவமும், அன்றிரவு வெள்ளி வாகனத்தில் தேரோட்டமும் நடை பெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் நவம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளது. நவம்பர் 24ம் தேதி மாலை 4 மணிக்கு பிச்சாடனார் உற்சவம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 26 ம்தேதி நடைபெறவுள்ளது. அன்று அதிகாலை மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் மாலை பஞ்சபூதங்களும் பரம்பொருளே என்பதை உணர்த்த, ஏகன் – அநேகன் தத்துவம் மூலம் எடுத்துரைக்கப்படும். அதன்பிறகு, பிரம்மதீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.அர்த்தநாரீஸ்வரர் காட்சி: தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, மாலை 5.55 மணியளவில் தங்கக்கொடி மரம் முன்பு, ஆண் – பெண் சமம் என்ற தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், ‘அர்த்தநாரீஸ்வரர்’ காட்சி கொடுப்பார்.
மலையே மகேசன்’ என போற்றப்படும் 2,668அடி உயரம் உள்ள ‘திருஅண்ணாமலை’ உச்சியில் பருவத ராஜகுல வம்சத்தினர் 5 அடி உயரம் உள்ள கொப்பரையில் மகா தீபத்தை நவ. 26-ம் தேதி மாலை 6 மணியளவில் ஏற்றி வைப்பர். அதைத் தொடர்ந்து தங்க ரிஷப வாகனங் களில் பஞ்சமூர்த்திகளின் மாட வீதியுலா நடைபெறும்.மகா தீபத்தைத் தொடர்ந்து, ஐயங்குளத்தில் 3 நாள் தெப்ப உற்சவம் நடைபெறும். நவம்பர் 27ம் தேதி இரவு சந்திரசேகரர், 28ம் தேதி இரவு பராசக்தி அம்மன், 29ம் தேதி முருகரின் தெப்பல் உற்சவம் நடைபெறும். 17வது நாளான நவம்பர் 30-ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவுபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.