• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருப்பூர் நஞ்சராயன் ஏரி தமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு

ByA.Tamilselvan

Sep 14, 2022

தமிழகத்தின் 17 வது பறவைகள் சரணாலயமாக திருப்பூர் நஞ்சராயன் ஏறி அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 25-ந் தேதி வனத்துறை அமைச்சர், ‘திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் ஏரிப்பகுதி, தமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்படும். இதற்காக தமிழக அரசு ரூ.7.5 கோடி தொகையை அனுமதிக்கும்’ என்று அறிவித்தார். இதற்கான வரைவு அறிவிப்பாணையை அரசுக்கு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அனுப்பியுள்ளார். அதில், நஞ்சராயன் ஏரி பகுதியைச் சேர்ந்த ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் வடக்கு தாலுகா ஆகிய இடங்களில் உள்ள 125.86.5 ஹெக்டேர் இடத்தை நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் என்று அறிவிக்கும்படி கோரியுள்ளார். அவரது கோரிக்கையை அரசு ஏற்று, அதற்கான அறிவிப்பாணையை வெளியிட முடிவு செய்துள்ளது. அந்த அறிவிப்பாணை தமிழக அரசிதழில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.