• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக நிகழ்வில் மனிதாபிமான சேவை செய்த காவல உதவி ஆய்வாளர்

ByKalamegam Viswanathan

Jun 2, 2023

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக பால்குட நிகழ்வில் பால்குட நிகழ்வில் மனிதாபிமான சேவை செய்த காவல உதவி ஆய்வாளர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக பால்குட விழாவை ஒட்டி காவல் துணை ஆணையர் சாய்பிரணித தலைமையில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர் ..கோவில் அருகே பார்வையற்ற ஒருவர் கூட்டத்தில் சிக்கி வெளியே செல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தார். இதனை அறிந்த கரிமேடு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜேஷ் குமார் பாதுகாப்பு பணியில் இருந்தார்.


கூட்டத்தில் சிக்கிய பார்வையற்றவரிடம் மனிதாபிமானமாக நடந்து கூட்டத்தை ஒதுக்கி அவர் செல்லும் வழியில் கொண்டு போய் விட்டு வந்தார். காவல்துறை அதிகாரியின் இந்த மனிதாபிமான சேவை பொதுமக்கள் மட்டுமின்றி அனைவரும் பாராட்டும் விதமாக இருந்தது.