

உதகை அருகே தலைகுந்தாவிலிருந்து அத்திக்கல் செல்லும் சாலையோரம் உள்ள வனப்பகுதியில் ஒய்யரமாக அமர்ந்திருந்த புலி, இவ்வழியாக காலை மாலை நேரங்களில் நடந்து செல்லும் மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே தலைகுந்தா மற்றும் சோலூர் ஆகிய பகுதிகளில் பகுதியில் அண்மை காலமாக புலியின் நடமாட்டம் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் சாலை ஓரங்களில் உலா வருவதும் சாலையை கடந்து செல்வதும், சுற்றுலாத்தலங்கள் மற்றும் பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும் சாலைகளில் உலா வருகிறது.

அதேப்போல் தலைகுந்தாவில் இருந்து அத்திக்கல் செல்லும் சாலையோரம் உள்ள வனப்பகுதிக்குள் புலி ஒய்யரமாக அமர்ந்திருந்ததை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பார்த்தும், வீடியோ பதிவு செய்தும் வெளியிட்டுள்ளனர்.
மேலும் புலியின் நடமாட்டத்தால் இவ்வழியாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

