

மதுரை ரயில் நிலையத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுரை ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகப்படும்படியாக வந்த மூன்று பேரை விசாரித்து அவர்களது உடமையை சோதனையிட்டதில் அவர்களிடமிருந்து சுமார் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட நபர்கள் திருநெல்வேலி சேர்ந்த டேவிட் ராஜா, அஜித்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

