

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அ.களத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுவதாக சிறுபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதிக்குச் சென்ற போலீசார் அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்ததில் அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிய வந்தது.

ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்து போலீசார் கடத்தலில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ராஜா பெரியசாமி மற்றும் ராஜேஷ் ஆகியோரை குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்


