• Wed. Apr 23rd, 2025

வேப்பூரில் ஸ்கேனிங் மிஷினுடன் மூன்று பேர் கைது

ByG. Silambarasan

Mar 25, 2025

வேப்பூரில் கருவில் இருக்கும் குழந்தை ஆனா, பெண்ணா என கண்டறியும் ஸ்கேனிங் மிஷினுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என பரிசோதிக்கும் ஸ்கேனிங் மெஷினுடன் மூன்று பேர் பிடிபட்டனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த தென்னரசு மற்றும் அஜிரபீ மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த எல்லம்பாள் ஆகிய மூவரும் காரில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என பரிசோதிக்கும் ஸ்கேன் மெஷினை வைத்துக்கொண்டு கடலூர் மற்றும் சேலம் மாவட்டம் பகுதிகளில் பரிசோதனை செய்யும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவ குழுவினர் இவர்களை பின் தொடர்ந்து வந்து, வேப்பூர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த மூவரையும் காருடன் பிடித்துள்ளனர். பின்னர் ஸ்கேன் மெஷின் இவர்கள் பயன்படுத்திய வாகனம் மற்றும் மூவரையும் வேப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.