• Fri. Dec 26th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஐ.பி.எஸ் அதிகாரிகள் மூன்று பேர் பணியிட மாற்றம்

Byவிஷா

Mar 21, 2025

தமிழக காவல்துறையில் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமாரின் உத்தரவின் பெயரில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் அதிகாரியின் ஆணைப்படி தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தர பிறப்பித்துள்ளது.
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகளின் விவரம்:

  1. சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக ப்ரவேஷ் குமார் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  2. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக லக்ஷ்மி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

3 . காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக நரேந்திரன் நாயர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.