• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சமூக ஊடகங்களில் அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியீடு; 4 பேர் மீது வழக்கு..,

ByS.Ariyanayagam

Feb 25, 2026

திண்டுக்கல்லில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், ரவுடிசத்தை பரப்பும் விதமாக வீடியோ பதிவிட்டுள்ளதாக நகர் DSP.கார்த்திக் அவர்களுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து

நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி, நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர்கள் முத்துக்குமார், முனியம்மாள், ஜான்சன், காதர்மைதீன் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு 4 பேர் மீது 4 வழக்குகள் பதிவு செய்து அவர்களைத் வலைவீசி தேடி வருகின்றனர்.