தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் வகையில், வரலாற்று அரசியல் துவக்கத்தை எடப்பாடியார் இன்றைக்கு துவக்கி உள்ளார்.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணம், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் துவக்கிய, கழக பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர் எடப்பாடியாரை வரவேற்க மக்கள் வெள்ளமென திரண்டு வந்து ,பெற்ற தாய் தன் மகனை தன் பிள்ளையை வரவேற்பது போலவும், அண்ணன்மார்கள் எல்லாம் தன் தம்பியை வரவேற்பதை போலவும், தம்பிமார்கள் எல்லாம் அண்ணனை வரவேற்பதை போலவும், மொத்தத்திலே ரத்த உறவுகள் தன் ரத்த உறவை அழைப்பது போன்ற இந்த மாபெரும் பிரச்சார பயணம் இன்றைக்கு தொடங்கி இருக்கிறது.
இந்த பிரச்சார பயணம் தன் ரத்த உறவை கண்ட மகிழ்ச்சியிலே ஒட்டுமொத்த ரத்த உறவுகளும் வரவேற்கிற காட்சி இந்த எழுச்சி பயணம்,புரட்சி பயணமாக வெற்றி பயணமாக அமைகின்ற போது, ரத்தக்கரை படிந்த இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதுகிற ஒரு பயணமாக தான் இது பார்க்கப்படுகிறது.

ஏன் என்று சொன்னால் இந்த அரசினுடைய அவலங்களை, உண்மை நிலைகளை, எதார்த்தத்தை, நியாயத்தை, தோலுரித்து காட்டுவதற்கு தமிழகத்தில் நாதி இல்லையா? என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிற போது ,வாராது வந்த மாமணியாக எடப்பாடியார் இன்றைக்கு எந்த விதமான அடக்குமுறைக்கும், அதிகார வர்க்கத்திற்கு, எந்த விதமான அச்சுறுத்தல்களையும் கண்டு அஞ்சாமல் எடப்பாடியார் தோலுரித்து காட்டி வருகிறார்.
ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் இந்த அரசு ரத்தக்கரை படிந்த அரசாக உள்ளது. இன்றைக்கு என்ன ஆகுமோ என்று உயிரை கையிலே பிடித்துக்கொண்டு அச்சத்தோடு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே தான் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற வெற்றி பயணத்தை எடப்பாடியார் மேற்கொண்டுள்ளார்,அது வெறும் சொல் அல்ல, இது ஒவ்வொரு தமிழனின் உயிர் மூச்சு ,ஒவ்வொரு தமிழர்களுடைய எதிர்பார்ப்பு, இது ஒவ்வொரு தமிழனின் லட்சியம் அதைத்தான் எடப்பாடியார் இந்த எழுச்சி பயணத்தை லட்சிய பயணமாக கொண்டு ,மக்களிடம் வரவேற்பை பெற்றிருப்பதை நேரில் நாம் பார்க்க முடிந்தது.
உதாரணத்துக்கு நான் மதுரையிலே இங்கே நடந்தவற்றை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் மதுரை மாநகராட்சியில் லஞ்சம், லாவண்யம் தலைவிரித்து ஆடுகிறது. இன்றைக்கு எந்தத் துறையில் லஞ்சம் நடைபெற்றது என்ற நிலை மாறி ,தற்போது எல்லாத்துறையிலும் லஞ்சம் உள்ளது லஞ்சம் இல்லாத துறையே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.
அதற்கு உதாரணம் தான் மதுரை மாநகராட்சியில் மண்டல தலைவர்கள் வரிவிதிப்பு முறைகளோடு காரணமாக ஒட்டுமொத்த ராஜினாமா செய்து இருப்பது இன்றைய தலைப்புச் செய்தியாக உள்ளது.
வரி விதிப்பு முறைகேடு காரணமாக மதுரை மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் வருவாய் இழப்பு ஏற்பட்டது தொடர்பான புகாரின் பேரிலே மாநகராட்சி ஓய்வு பெற்ற உதவி ஆணையர், உதவி வருவாய் அலுவலர் உள்பட எட்டு பேர்கள் ஏற்கனவே மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் அண்மையிலே கைது செய்யப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
எடப்பாடியாரின் வழிகாட்டுதோடு இன்றைக்கு மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது, இந்த நிலையிலே தான் வரி முறைகேடு புகார் தொடர்பாக திமுக மண்டல தலைவர்கள் சிலரிடம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர், அப்போது ஒவ்வொரிடமும் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், பெரும்பாலானோர் மழுப்பலான பதில்களையே அறிவித்ததாகவும் காவல்துறை வட்டாரங்களில் செய்திகள் வெளி வந்துள்ளன.
இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் விசாரணை நடத்தியதில், முதலமைச்சர் அறிவிப்பு கொடுத்து இன்றைக்கு மண்டல தலைவர்கள் ராஜினாமா என்று சொன்னால், மதுரை மாநகராட்சி வரலாற்றிலே ஒட்டுமொத்தமாக ஊழல் புகாரிலே ராஜினாமா செய்த வரலாறு இதுவரை இந்த மதுரை என்பது பார்த்திருக்கிறதா? இது மக்களுக்கு அதிர்ச்சிக்குள்ளான செய்தியாக இருக்கிறது
யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல, இன்றைக்கு ஊழலால் மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்தது போல ,இந்த ஊழல் கறை படிந்து இருக்கிற திமுக அரசு ராஜினாமா செய்கிற நிலையில்தான் உருவாகும், இப்போது அதற்கு முன் அறிவிப்பாக மதுரை மாநகராட்சியின் மண்டல தலைவர்கள் ராஜினாமா உள்ளது
இதேபோன்று எல்லா மாநகராட்சியிலும் இதே நிலைமை உள்ளதா? என்று மக்கள் உறைந்து போய் உள்ளார்கள்.
இன்றைக்கு இதையெல்லாம் மக்களிடத்திலே எடுத்துச் சொல்லுகிற, ஒரு லட்சிய பயணமாக, மக்களை பாதுகாக்க ,தமிழகத்தை மீட்டெடுக்க இந்த பயணம் புரட்சி பயணமாக, வெற்றி பயணமாக அமைய மீண்டும்,மீண்டும் எல்லாம் வல்ல இறைவனை நாம் பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும்
மக்கள் தீர்ப்பே, மகேஷ் தீர்ப்பு என்பதை போல மக்களுக்கு ஆற்றுகின்ற சேவையை மகேசனுக்கு ஆற்றுகின்ற சேவையாக கொண்டு உழைத்து வருகிற எடப்பாடியாரின் இந்த எழுச்சி பயணம் ஒரு புதிய வெற்றி சரித்திரத்தை தமிழகத்தில் உருவாக்குவதற்கு, இந்த தாய் தமிழ்நாட்டு மக்கள் பேர் ஆதரவை வழங்கியதை நாம் பார்க்க முடிந்தது.
ஆகவே ஆங்காங்கே இருக்கிற கழகப் புரட்சித்தலைவி அம்மா பேரவையினுடைய தொண்டர்கள், நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்களின் வழிகாட்டுதலோடு , எடப்பாடியார் உங்கள் மாவட்டத்திற்கு வருகிறபோது விவசாயிகளோடு, மாணவர்களோடு ,இளைஞர்களோடு, வாக்காளர்களோடு அழைத்து வந்து அதிலே பங்கேற்க செய்து நாம் புனித கடமையை ஆற்ற வேண்டும்,
கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார்உங்களுக்கு ஒரு வளமான, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இந்த புனித பணி உங்களுக்கு அடித்தளமாக அமையும் என கூறினார்.