

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், 1926 நவ., 6ல் பிறந்தவர் டி.ஆர்.மகாலிங்கம். தன் தாய்மாமா, ஜாலரா கோபால அய்யரிடம் கர்நாடக இசை கற்றார். 5வது வயது முதல், புல்லாங்குழல் வாசிப்பதை இயற்கையாகவே கற்றுக் கொள்ள துவங்கினார். 7வது வயதில், சென்னை மயிலாப்பூரில் நடந்த தியாகராஜா இசை திருவிழாவில் கச்சேரி செய்தார்.கணிதத்திலும் மேதையாக திகழ்ந்தார். கணக்கு புதிர்கள் விடுவிப்பதில் நிபுணராக இருந்தார். புல்லாங்குழல் இசையில் பிறவி கலைஞனாக போற்றப்பட்டு, ‘மாலி’ என்ற செல்ல பெயரால் அழைக்கப்பட்டார். புல்லாங்குழல் வாசிப்பில், புதிய வகையை அறிமுகப்படுத்தினார். வாய்ப்பாட்டு நுணுக்கம் அனைத்தையும், புல்லாங்குழலில் வெளிப்படுத்தினார்.

மத்திய அரசு வழங்கிய, ‘பத்மஸ்ரீ’ விருதை ஏற்க மறுத்தார். 1986 மே 31ல், தன் 59வது வயதில் காலமானார்.புல்லாங்குழல் கலைஞர் டி.ஆர்.மகாலிங்கம் பிறந்த தினம் இன்று!
