


ஜவகர்புரம் ஸ்ரீமுனியாண்டி திருக்கோவிலில் 63ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
மதுரை மாவட்டம் கோ.புதூர் ஜவகர்புரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முனியாண்டி திருக்கோவில் 63 ஆம் ஆண்டு பங்குனி உற்சவ பெருவிழா கடந்த மார்ச் 28ஆம் தேதி கங்கண காப்பு கட்டுதல் நிகழ்வுடன் துவங்கியது. 10நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முனியாண்டி சாமிக்கு சிறப்பு அலங்காரமும், விசேஷ பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன.

திருவிழாவை முன்னிட்டு, தினந்தோறும் தெம்மாங்கு பாடல் நிகழ்ச்சி இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான உலக நன்மை வேண்டியும், மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கலர் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வருகிற சனிக்கிழமை மாபெரும் அன்னதானம் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜவகர்புரம் ஊர் பொதுமக்கள் விழா குழுவினர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

