



ஆண்டவனுக்கே வெளிச்சம் – அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு ஓபிஎஸ் பதில்…
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம், சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். அமித்ஷாவை சந்தித்த அதிமுக குழுவினர் செங்கோட்டையனை தவிர்த்து விட்டு சென்றது குறித்த கேள்விக்கு, அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என பதில் அளித்தார்.


