• Wed. Mar 19th, 2025

வேப்பூர் அருகே ஸ்ரீ பவானி பார்மஸி கல்லூரியில் மூன்றாவது தேசிய கருத்தரங்கம்!

ByG. Silambarasan

Mar 5, 2025

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கண்டபங்குறிச்சி ஸ்ரீ பவானி கல்வி நிறுவனத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பவானி பார்மஸி கல்லூரியில் மூன்றாவது தேசிய கருத்தரங்கத்தை ஸ்ரீ பவானி கல்வி நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான ஜெ.நாராயணன், தாளாளர் மற்றும் செயலர் நா.மகாலட்சுமி நாராயணன் ஆகியோர் பங்கேற்று கருத்தரங்கை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.

இதில் மருந்தியல் துறையின் வல்லுநர், புதுச்சேரி மதர் தெரஸா பல்கலைக்கழக டாக்டர் கவிமணி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக பேராசிரியர் டாக்டர் கதிரேசன், புதுச்சேரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பார்மஸி கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயராமன், ஆகியோர் பங்கேற்று புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு, பதிவு செய்தல், மருந்தியல் துறையின் மாற்றங்கள், முன்னேற்றங்கள், தொடர்பாக கருத்துரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள கே.ஜி காலேஜ் ஆப் பார்மஸி, சி.எஸ் ஜெயின் காலேஜ், காந்திமதி காலேஜ் ஆப் பார்மஸி, காமரஜர் காலேஜ், ராக் காலேஜ் ஆப் பார்மஸி, எம்.ஆர்.கே காலேஜ், ஜே கே கே எம் காலேஜ், கமாலட்சி பாண்டுரங்கன் கலேஜ் மற்றும் மேயர் இராதாகிருஷ்ணன் ஆகிய கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் சுமார் 1170 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ பவானி கல்வி நிறுவன நிர்வாக அலுவலர் பொன்.சடையமுத்து, பார்மஸி கல்லூர் முதல்வர் டாக்டர்.செந்தில் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.