

நெய்வேலி என்எல்சி வீடு, நிலம் கொடுத்த ஒப்பந்த தொழிலாளி தங்களுக்கு பணி வழங்க கோரி, என்எல்சி சுரங்கம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு அப்பகுதி மக்கள் வீடு, நிலம் கொடுத்து என்எல்சியில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் அந்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் வருகின்ற 8-ம் தேதி முடிவடைய உள்ளதால், அதில் பணியாற்றும் 30 தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும், தாங்கள் வீட்டு நிலம் கொடுத்து நிரந்தர பணியில்லாமல் ஒப்பந்த தொழிலாளியாக தற்காலிக பணியாளர்களாக நியமித்து வருகின்றனர். ஆகையால் தங்களை நிரந்தர ஒப்பந்த தொழிலாளராக பணி வழங்க கோரி மற்றும் ஊதியத்தை உயர்த்தி தரக்கோரி 30 தொழிலாளர்கள் சுரங்கம் ஒன்று முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

