• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மூன்றாம் ஆண்டு 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி

ByG.Suresh

Jan 5, 2025

திரு பிரதர்ஸ் அணியினரால் நடத்தப்படும் மாபெரும் மூன்றாம் ஆண்டு 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது, கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியில் மொத்தம் பதினாறு அணிகள் கலந்துகொண்டு விளையாடின, இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக சித்தலூர் பிரபாகரன் அதிமுக பிரதிநிதி மற்றும் அனைத்து பரிசுகளுக்கும் வெற்றி கோப்பை வழங்கிய சூரக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திரு மலைச்சாமி அவர்களும் வேலூர் காளீஸ்வரன் திமுக தொண்டரணி அமைப்பாளர், வேலூர் வினோ என்ற நாகராஜன் மற்றும் இராஜ்குமார் அஇஅதிமுக அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா கமிட்டியின் சார்பாக வெற்றிபெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 20000 மற்றும் வெற்றிக்கோப்பை இரண்டாம் பரிசாக 15,000 மற்றும் வெற்றிக்கோப்பை மூன்றாம் பரிசாக பத்தாயிரம் வெற்றி கோப்பை மற்றும் நான்காம் பரிசாக 7000 மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டியினை சிறப்பாக நடத்திக் கொடுத்த கமிட்டி திரு பிரதர்ஸ் மற்றும் கமிட்டி நண்பர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றி கோப்பைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.