• Thu. Oct 1st, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

திரெளபதி முர்மு மனுதாக்கல் செய்தார்

ByA.Tamilselvan

Jun 24, 2022

பாஜக கூட்டணியை குடியரசுத்தலைவர் வேட்பாளரான திரெளபதி முர்மு மனுதாக்கல் செய்தார்.
குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணிசார்பில் திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இருவரும் முக்கியத் தலைவர்களிடம் ஆதரவுக் கோரி வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனுவை தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலாளரிடம் திரெளபதி முர்மு வேட்பு மனுவை அளித்தார். பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அதிமுக சார்பில் ஓ.பி.எஸ், தம்பிதுரை உள்ளிட்டோரும் பாஜக ஆளும் பிற மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.