• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பைக் லாக்கை காலால் உதைத்து உடைத்து திருடி சென்ற திருடர்கள்..,

ByKalamegam Viswanathan

May 24, 2026

மதுரையை சேர்ந்த ஜெயசூர்யா என்பவர் தனது இருக்சக்கர வாகனத்தை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வாகன காப்பகத்தின் வாசலில் (22.05.2026) இரவு சுமார் 10:30 மணியளவில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்தபோது அவரின் வாகனம் காணவில்லை. அருகில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அவரின் வாகனம் திருடப்பட்டுள்ளது உறுதியானது.

அந்த சிசிடிவி பதிவில் இரு இளைஞர்கள் அந்த வாகனத்தின் லாக்கை (பூட்டை ) காலால் உடைந்து திருடிச் சென்றுள்ளது பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஜெயசூர்யா கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.