• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கார் மோட்டார் பைக் மீது மோதியதில் இளைஞர்கள் படுகாயம்..,

BySeenu

May 24, 2026

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பெரிய குளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார்(25).இவர் தற்போது ஈரோடு மாவட்டம் மொடச்சூர் பகுதியில் தங்கி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார்.

இவரும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அபி நாயகன்(20) என்பவரும் நேற்று முன்தினம் மாலை மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையில் மோட்டார் பைக்கில் சென்றுள்ளனர்.அப்போது,அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி தேரம்பாளையம் பாச்சனூர் பகுதியை சேர்ந்த தயாளன்(42) என்பவர் அதிவேகமாக தனது காரில் சென்றுள்ளார்.

சரியாக கார் தேரம்பாளையம் தனியார் திருமண மண்டபம் அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டார் பைக் மீது மோதியதில் பைக்கில் வந்த இருவரும் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டனர்்இதில் இளைஞர்கள் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து அறிந்த காரமடை போலீசார் விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரையும் மீட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும்,இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கார் மோதியதில் மோட்டார் பைக்கில் சென்ற இளைஞர்கள் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.