மாநாடு’ திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வெங்கட்பிரபுவும், சுரேஷ் காமாட்சி அவர்களும் முதலில் வேறு சில நடிகர்களைத்தான் அணுகி இருக்கிறார்கள்..
தெலுங்கு ஹீரோ ரவிதேஜாவைத்தான் முதலில் கேட்டிருக்கிறார்கள்… அவர் கதையை கேட்டுவிட்டு, ‘நடிக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.. பின்பு ஏதோ காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விடுகிறது.. பின்பு அரவிந்த்சுவாமியிடம் பேசியிருக்கிறார்கள்.. அவருக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது.. எப்படியாவது இந்த கதையில் நடித்துவிட வேண்டும் என்று அவரும் ஆர்வமாக இருந்திருக்கிறார்.. ஆனால் இடையே தலைவி ஷூட்டிங் கால்ஷீட் குளறுபடிகளால், அவரால் நடிக்க முடியாமல் போனதாம்…
அதேபோல நடிகர் அர்ஜுனிடமும் அந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு பேசி இருக்கிறார்கள்.. ஆனால் அர்ஜுன் கதையை கேட்டுவிட்டு, “இதில் ஹிந்து முஸ்லிம் சம்பந்தப்பட்ட காட்சிகள் வருகிறது.. அதனால் ஏதாவது பிரச்சினை ஆகிவிடும்.அதனால் என்னால் நடிக்க முடியாது” என்று கூறியிருக்கார்.
அதன் பின்புதான், எஸ்.ஜே. சூர்யாவிற்கு இந்த வாய்ப்பு போயிருக்கிறது. கதையை கேட்ட அடுத்த நொடியே எஸ்.ஜே.சூர்யா, “இந்த கதையில் நடிக்கிறேன்” என்பது சம்மதம் தெரிவித்திருக்கிறார்..எது எது யார் யாருக்கு போய் சேரணுமோ, அது அது அவங்கவங்களுக்குத்தான் போய் சேர்ந்திருக்கிறது..