• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

போலி வாக்காளர்களை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை..,

ByS. SRIDHAR

Nov 3, 2025

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் பத்தாம் தேதி முதல்வர் பல்லாயிரம் கோடி மதிப்பில் நடந்து முடிந்த பணிகளையும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.

எஸ் ஐ ஆர் தேவையில்லை என்று நாங்கள் கூறவில்லை அவசரப்பட்டு எஸ் ஐ ஆர் எடுக்கக் கூடாது தேர்தல் முடிந்த பிறகு நிதானமாக யாருடைய வாக்கும் விடுபடாமல் எடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் கூறுகிறோம்.

எஸ்ஐஆர் தேவை என்று கூறி திமுகவிற்கு எங்கே அதிகமாக வாக்குகள் உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு உள்ள வாக்காளர்களை ஏற்றிவிட்டு நாம் வெற்றி பெறலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது…

உச்ச நீதிமன்றத்தில் எங்களுடைய வாதங்களை இதுதான் நாங்கள் எடுத்துக் கூறுவோம்.

அவசரப்பட்டு எஸ் ஐ ஆர் எடுக்கக் கூடாது என்று நாங்கள் வாதிடுவோம்.

பொதுமக்களிடம் விண்ணப்பங்கள் கொடுத்த பிறகு பூர்த்தி செய்து அதை மீண்டும் அவர்கள் வழங்காவிட்டால் அவர்களுடைய வாக்காளர் உரிமையை எஸ் ஐ ஆர் பறித்து விடும்.

திமுகவிற்கு வாக்காளர் பட்டியலில் எந்த போலி வாக்காளர்களையும் சேர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டு விடக்கூடாது என்ற அச்சத்தின் காரணமாக தான் நாங்கள் இதை கூறுகிறோம்.

பீகாரில் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரகுபதி அது அவர்களுடைய உட்கட்சி விவகாரம் இருப்பினும் அனைத்து தரப்பும் ஒன்றினை வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியதால் அவர் நீக்கப்பட்டுள்ளார்

பிஜேபியை பொறுத்தவரை பல டீம்கள் வைத்துள்ளனர் அது செங்கோட்டையன் தலைமையிலான டீமும் ஒன்று.

திண்டுக்கல் சீனிவாசனுக்கு திராணியை பற்றி பேச தகுதியில்லை

ஆப்பிளை கையில் வைத்துக் கொண்டு மாம்பழம் என்று கூறுவார் இவர் எல்லாம் திராணியை குறித்து பேசலாமா?

கோடநாடு கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து கொண்டுள்ளது அது குறித்து விவரமாக பேச முடியாது.

கோடநாடு கொலை வழக்கில் நான்கரை வருடம் ஆகியும் இதனால் வரை எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்கவில்லை பாயவில்லையே என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பாயவில்லை என்று உங்களுக்கு தெரியுமா அதுக்குண்டான விசாரணைகள் நடந்து கொண்டு தான் உள்ளன

அதை எல்லாம் வெளியே கூற முடியாது

திமுக மீது எத்தனை குற்றச்சாட்டுகளை யார் மீது வைத்தாலும் மக்கள் எங்களுக்கு தான் வாக்களிப்பார்கள் கே என் நேருவைப் பொறுத்தவரை அவரது தொகுதியில் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அது பாஜகவுக்கும் தெரியும் அதிமுகவுக்கும் தெரியும்….

அமைச்சர் நேரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரகுபதி அவர்கள் கொடுத்தவுடன் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியுமா?

அது உண்மையா பொய்யா என்று விசாரிக்க வேண்டாமா?

ஆதாரங்கள் தயாரிக்கப்பட்டவையாக இருக்கலாம்.
இதையெல்லாம் விசாரித்து உண்மை கண்டறிந்து தான் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க முடியும்.

அவர்கள் சொன்னார்கள் என்பதற்காக நடவடிக்கை எடுக்க முடியாது.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது.

அதனால் தான் அதிகமான பெண்கள் உயர் கல்வி படிப்பதற்கு தமிழகம் வருகின்றனர்.

ஒரு குற்ற சம்பவம் நடந்தால் உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள் அதை தான் நாம் பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா இல்லையா என்பது குறித்து நீங்களே தமிழக முழுவதும் சுற்றி பார்த்து வரலாம் அதற்கு மாவட்ட அதிமுக செலவுகளை ஏற்கும் என்று அமைச்சர் கூறியவுடன் செய்தியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட அமைச்சர் மாவட்ட திமுக என்று திருத்தி கூறினார்

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மகனின் தலையீடு அதிகமாக உள்ளதால் அதிமுகவும் குடும்ப அரசியலுக்கு மாறி விட்டது என்று செங்கோட்டையன் கூறி இருக்கலாம்.

புதுக்கோட்டை மாவட்டம் பிசனாத்தூர் கிராமத்தில் மருத்துவ கழிவுகள் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வருகின்றனர் இது குறித்து அமைச்சரிடம் கேள்வி கேட்டபோது மாவட்ட ஆட்சியர் இந்த ஆலய அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் பொதுமக்களும் போராடி வருகின்றனர் எனவே நிச்சயமாக அந்த ஆலை புதுக்கோட்டை மாவட்டத்தில் வராது

இவ்வாறு அவர் பேசினார்