• Sat. Apr 20th, 2024

இலங்கையில் அரிசி வாங்குவதற்கு பணம் இல்லை

ByA.Tamilselvan

Sep 13, 2022

இலங்கையில் அரிசி பற்றாக்குறை உள்ளது. அதே நேரம் அரிசி இறக்குமதி செய்ய பணம் இல்லை என வேளாண் மந்திரி மகிந்த அமரவீரா தெரிவித்து இருந்தார்.
பணம் இல்லாததால் உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்தும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் இல்லாமல் விவசாயிகள் திருப்பி அனுப்பப்படும் செய்திகளை தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் அரசை பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. இந்த கட்சி எம்.பி. ரோகிணி கவிரத்னே கூறுகையில், ‘இலவச அரிசிக்காக வெளிநாடுகளிடம் அரசு கெஞ்சிக்கொண்டு இருந்தது. அதேநேரம் உள்ளூரில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படவில்லை’ என குற்றம் சாட்டினார். அரிசி வாங்குவதற்கு பணமில்லை என்பதற்காக அரசு வெட்கப்பட வேண்டும் எனக்கூறிய அவர், ஆனால் 37 புதிய மந்திரிகளை நியமிக்க அரசிடம் போதுமான பணம் இருப்பதாக தெரிகிறது என்றும் சாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *