• Thu. Feb 12th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

அதிகாரத்துக்கு அஞ்சுகின்ற என்ற கூட்டம் தமிழ்நாட்டில் இல்லை- திருச்சி சிவா பேச்சு..,

ByP.Thangapandi

Feb 12, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டியில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது மாபெரும் பொதுக்கூட்டம் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது., முன்னதாக உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் உசிலம்பட்டி தொகுதிக்கு தேவையான கோரிக்கைகளை உசிலம்பட்டியின் பல்வேறு சங்க நிர்வாகிகளிடமிருந்து கோரிக்கை மனுவாக பெற்றுக் கொண்டு தேர்தல் வாக்குறுதியாக அளிப்பதோடு, நிறைவேற்றி காட்டுவோம் என உறுதியளித்தனர்.,

தொடர்ந்து அத்திபட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா.,

வாக்களிக்கும் இடத்தில் மட்டுமே ஏழைகளும், பணக்காரனாக மாறுவான், எல்லா இடங்களிலும் புறக்கணிக்கப்பட்டு நொந்து போனவர்களை பார்த்து சொல்கிறேன்., எல்லோரையும் சமமாக கொண்டு போய் நிறுத்தும் வாக்குசீட்டு உங்கள் கையில் தரப்பட இருக்கிறது.,

உங்களை யார் ஆள வேண்டும் என நீங்கள் தீர்ப்பு சொல்லுங்கள், உங்களுக்கு தெரியாத கட்சி இல்லை, தெரியாத ஆட்சி இல்லை, சொல்லிவிட்டு செய்யாமலே போனவர்கள் உண்டு, கேள்வி கேட்டவர்களுக்கு சிறை கதவை திறந்து வைத்தவர்களும் உண்டு., ஆனால் கேட்காமலே கில்லி தருகின்ற ஸ்டாலின் வருகிறார், உங்கள் முன்னால் உங்கள் வீட்டுப் பிள்ளையிலிருந்து வளர்ந்தவர்கள் வரை பள்ளிக்குப் போகிறார்கள், கல்லூரிக்கு போகிறார்கள், எதிர்காலத்தை தேடி அலைகிறார்கள், அத்தனை பேருக்கும் தேவையானதை செய்கிற நாங்கள் இருக்கிறோம், நியாயத்தின் அடிப்படையில் உங்கள் முன்னால் கேட்கிறேன், நான் உங்களுக்கு அந்நியன் அல்ல நானும் தமிழ்நாட்டில் இன்னொரு பகுதியை சேர்ந்தவன் தான் இந்த நாட்டின் மீது அக்கறை உள்ளவன்.,

நான் பிறந்த மூன்றாவது மாதம் என் தந்தை இறந்து போனார், என் தந்தையை நான் பார்த்ததில்லை, அவர் முகம் எப்படி இருக்கும் எனக்கு தெரியாது, இந்த உண்மை என்னோடு இருக்கும் பலருக்கு தெரியாது, என் தாய் விதவையான போது அவருக்கு வயது 29, பெண் வளர்த்த வளர்ப்பு வீணாகவில்லை, ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு பெண்ணால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் நின்று பேசுகிறேன், எனக்கு உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் இல்லை, சித்தப்பா பெரியப்பா கிடையாது, மாமன் மைத்துனன் கிடையாது, ஆனால் நான் தனி மனிதன் இல்லை, தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அண்ணன் தம்பிகள் இருக்கிறார்கள், அக்காவும் தங்கையும் இருக்கிறார்கள், எனது கட்சி தந்தது அதன் அடிப்படையில் தான் ஒரு சகோதரனாக உங்கள் முன்னால் வந்து கேட்கிறேன்., நாம் எல்லோரும் அந்நியர்கள் அல்ல நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள் போல இந்த நாட்டிற்கு நல்லாட்சி வேண்டும், என்கிற போது அதை உருவாக்க நான் உங்கள் முன்னால் வந்து வேண்டி விரும்பி கேட்கிறேன், பேசுவது தனிப்பட்ட ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல, திமுக ஆட்சிக்கு வந்தால் நாங்கள் வளம் பெறுவோம் என்பதற்காக அல்ல, இந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் நீங்கள் நலமாவீர்கள் எங்கள் ஆட்சி உங்களுக்காக., எங்கள் ஆட்சியின் திட்டங்கள் எதிர்காலத்திலும் உங்களது வளர்ச்சிக்காக இருக்கும்.,

தாய்மொழி தமிழை அகற்றிவிட்டு இந்தி வருமேயானால் அதை தடுத்து நிறுத்துகிற வீரர்களின் கூடாரமாக திராவிட முன்னேற்ற கழகம் இருக்கிறது., இந்தி படிக்காவிட்டால் உனக்கு பணம் இல்லை என டெல்லி மிரட்டினால், உன் மிரட்டலுக்கு அஞ்சுகிறவன் நான் இல்லை என்கிற வீரன் எங்கள் தளபதி ஸ்டாலின்., யார் நம்மை பார்த்து மிரட்டுகிறார்களோ அவர் உட்கார்ந்து இருக்கிற அதே இடத்தில் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் அவரது பரிவாரங்களுடன் உட்காந்திருக்கும் அவையில் நேருக்கு நேராக நானும் தங்கத்தமிழ்செல்வன் சொல்கிறோம் இவர்களுக்கு அஞ்சியவர்கள் நாங்கள் இல்லை., ஏனென்றால் நாங்கள் அண்ணாவின் தம்பிகள், அண்ணா நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு முன்னால் நின்று தான் இந்தி படிக்க முடியாது என சொல்லி விட்டு வந்தார்.,

என் தாய் மொழிக்கு நிகரான மொழி உலகத்தில் எங்கும் இல்லை, உலகத்தில் இருக்கும் மூத்த மொழிகளுக்கு எல்லாம் முதன்மையான மொழி நம் தாய்மொழி தமிழ்., ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்த தமிழன் முதன் முதலாக இரும்பை பயன்படுத்தி இருக்கிறான், நாகரீகத்தை சொல்லித் தந்திருக்கிறான், நகர்ப்புறத்தைப் போல வீடு கட்டி வாழ்ந்திருக்கிறான்,

என் மொழிக்கு மாற்றாக 200 ஆண்டுகளுக்கு முன் உருவான ஒரு மொழி என்றால்., அதிகாரத்துக்கு அஞ்சுகின்ற என்ற கூட்டம் தமிழ்நாட்டில் இல்லை., எங்களது உழைப்பையும், கடமையையும் கவனியுங்கள், ஒருபுறம் கட்சி நடத்துகிறோம் கொள்கை அடிப்படையில், நாட்டை காக்கிறோம், இனத்தை காக்கிறோம், மொழியை காக்கிறோம் யாருக்கும் அடமானம் வைக்கவில்லை., இன்னொரு புறம் ஆட்சி செல்கிறது, யாருக்கு என்ன தேவை என்பதை பார்த்து பார்த்து செய்கிறோம், இந்த இரண்டையும் செய்கிற ஒரே தலைவராக ஸ்டாலின் இருக்கிறார்., திராவிட மாடல் ஆட்சி விளக்கத்தை கேட்கிறார்கள், நான் விளக்கம் நிறைய சொல்ல வேண்டாம், ஒன்றே ஒன்றுதான் சொல்வோம், எல்லோருக்கும் எல்லாம் எல்லோரையும் ஒன்றாக கருதி எல்லாருக்கும் கொடுக்கின்ற அரசு, எவரையும் விட்டு செல்லாது இந்த ஆட்சி.,

திருநங்கைகளுக்கு திருநங்கைகள் என பெயர் சூட்டியவர் கலைஞர், அவர்களுக்கு வாரியம் அமைத்துக் கொடுத்தவர்கள் கலைஞர், அவர்களுக்கென தனி நபர் தீர்மானம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொடுத்தது இந்த திருச்சி சிவா, நாடாளுமன்றத்தில் 45 ஆண்டுகளுக்கு பின்பு கொண்டுவரப்பட்ட தனிநபர் மசோதா திமுகவைச் சேர்ந்த என்னை சார்ந்தது., உடல் ஊனமுற்றோர்களை மாற்றுத்திறனாளிகள் என பெயர் சூட்டி அழைத்தவர் கலைஞர்., இப்போது ஸ்டாலின் என்ன செய்திருக்கிறார் தெரியுமா ஒவ்வொரு பஞ்சாயத்து, நகர வார்டு பகுதிகளில் ஒரு மன்ற உறுப்பினராக நியமிக்க விடுவார் என்ற அறிவிப்பு தளபதி ஸ்டாலினை சாரும்., உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இடம் ஒதுக்கிடு.,

எங்கள் கடமை பெரிது ஊரெல்லாம் சுற்றுகிறோம், பேசுகிறோம் என நினைக்க வேண்டாம்., நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்ற அவர்கள் எவ்வளவு பெரு முயற்சி எடுக்கிறார்களோ, அதே நேரத்தில், அதில் தவறு கண்டுபிடிப்பதற்கான வேலையும் செய்கிறோம், காரணம் இந்த கொடி உயர்ந்தால் தான், உதயசூரியன் உதித்தால் தான், தமிழ்நாடு யாருக்கும் அடி பணியாது.,

பொய்யான வாக்குறுதிகளோடு சில பேர் புறப்பட்டு வருவார்கள் அவர்களெல்லாம் நம்பாமல் எங்களை எங்களை காக்கின்ற கட்சி திமுக தான் என்று சொல்லி ஆதரவு தரப் போகிற நீங்கள் தான் என்ற காரணத்துக்காக தான் வந்திருக்கிறேன் அடுத்தவர்களை ஏசுவதற்கு அல்ல தூற்றுவதற்கு அல்ல அது எங்கள் வேலை அல்ல மீண்டும் நான் வருவேன் எப்போது என்றால் வெற்றி விழா கூட்டத்திற்கு தான் வருவேன் வெற்றிக்கு பின்னால் நன்றி அறிவிப்பு கூட்டம் உசிலம்பட்டியில் தான் நடக்கும் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் என்று இங்கே ஆதரவு வேண்டும் இப்படி ஒரு முதல்வர் நமக்கு இல்லை என்ற ஏக்கம் அவர்களுக்கு தமிழ்நாடு ஒரு வீர மண் என்பதை வீரம் செரிந்தவர்கள் வாழ்கின்ற மண் என்பதை எந்த நேரத்திலும் புயலையையும் சாதிக்க வல்லமை கொண்டவர்கள் என்பதை நிருபிக்கின்ற தேர்தலாக இருக்க வேண்டும்., அதன் அடையாளமாக மீண்டும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி தொடர, உங்கள் ஆதரவை திமுக கூட்டணிக்கு தருக., குறிப்பாக இந்த தொகுதியில் தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் கழகம் வெற்றி பெற்றது என்ற தீர்ப்பை தாருங்கள் மீண்டும் வெற்றி விழாவில் சந்திப்போம்., எதிர்காலம் நம்முடையது அது ஒளிமயமானது., தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்., என பேசினார்.,