• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

திருமண மண்டபங்களில் நடந்த திருமணத்திற்கு நிதியுதவி கிடையாது – தமிழக அரசு

திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் அனைத்து திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் ரூ.25,000 மற்றும் ரூ.50,000 திருமண நிதியுதவி தொகையுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு தாலிக்கு தங்கம் உதவி தொகை கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையில் இருக்கும் தகுதியானவர்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயம் கோரி விண்ணப்பிப்போரின் வீட்டில் யாரும் அரசுப் பணியில் இருக்கக்கூடாது. மணமகளுக்கு 18 வய்தும், மணமகனுக்கு 21 வயதும் நிரம்பியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வேறு ஏதேனும் திருமண நிதியுதவி திட்டதின்கீழ் பயன்பெற்றிருக்க கூடாது. மாடி வீடு நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தால் திருமண உதவித் தொகை வழங்கப்படாது.

விண்ணப்பிப்போரின் ஆண்டு வருமானம் ரூ.75 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். திருமண மண்டபங்களில் நடந்த திருமணங்களுக்கு நிதியுதவி தொகை விண்ணப்பிப்போரின் மனு தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.