தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு ஜாதி வெறி இருக்கிறது என முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க.நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் தெரியவில்லை, அவருக்கு ஜாதி வெறி இருக்கிறது என முன்னாள் எம்எல்ஏவும் பாஜக மூத்த நிர்வாகியுமான எஸ்வி சேகர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தமிழகத்தில் பிராமணர்களுக்கென ஒரு கட்சியை தொடங்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஒருவேளை பிராமணர்களால் தொடங்கப் போகும் கட்சியை நான் வழிநடத்த வேண்டும் என அவர்கள் விரும்பினால் நான் பாஜகவில் இருந்து விலகுவேன் என அவர் தெரிவித்துள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.