• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேனி: மாநில செஸ் போட்டி: வென்றவர்களுக்கு பரிசளிப்பு

தேனியில் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி மற்றும் வைகை அரிமா சங்கம் இணைந்து 73 வது குடியரசு தின விழா கோப்பைகளுக்கான மாநில அளவிலான முதல் செஸ் போட்டியை நடத்தியது.

தேனி அன்னப்பராஜா மண்டபத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 8, 10, 12, 14 வயது பிரிவினர் மற்றும் பொதுப்பிரிவினர் பங்கேற்றனர். வைகை அரிமா சங்க தலைவர் எஸ்.கண்ணன் தலைமை வகித்தார். பொருளாளர் எஸ்.பி.சரவணராஜா, அகாடமி செயலாளர் ஆர்.மாடசாமி, பொருளாளர் எஸ்.கணேஷ குமார் முன்னிலை வகித்தனர். அகாடமி தலைவர் எஸ்.சையது மைதீன் அனைவரையும் வரவேற்றார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாநில வாலிபால் பயிற்சியாளர் எம்.எப்.முகமது தவ்பிக் போட்டிகளை துவக்கி வைத்தார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.ராதா கொரோனா விழிப்புணர்வு உரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய கட்டுநர் சங்க தலைவர் சேது நடேசன், தமிழ்நாடு கிராம வங்கி தேனி கிளை மேலாளர் ஆர்.பவித்ரா, தேனி வசந்த் அண்ட் கோ மேலாளர் எம்.ராஜ பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் வைகை அரிமா சங்க நிர்வாகிகள் எம்.நவீன், எஸ்.அமானுல்லா, பி.சீனிவாசன். சி.ஞானகுருசாமி ஆகியோர் பங்கேற்றனர். நடுவர்களாக எஸ்.வாசி மலை, எஸ்.கண்ணன், வி.ஹரிசங்கர் செயல்பட்டனர். போட்டி இயக்குனர் எஸ்.அஜ்மல்கான் விழா ஏற்பாடுகளை செய்ததோடு, அனைவருக்கும் நன்றி கூறினார்.


வெற்றி பெற்றவர்கள் விபரம்:
(8 வயது பிரிவு): பி.சாய்ஸ்ரீசரண், எம்.நிலவன், எஸ்.முகில், சி. அனுசித்ரா, பி.ஆர்.சஜ்சனா
(10 வயது பிரிவு): எம்.நந்தகிஷோர், ஏ.ஜோஇன்பென்ட் ஆ௹ன், எஸ்.சாய்ஸ்ரீ, ஜெ.மிர் துளா, பி.கே.தன்யாஸ்ரீ
(12 வயது பிரிவு):
எஸ்.ராம்சபரீஸ், கே.மதனா கைலாஸ், ஆர்.எஸ்.துஸ்வந்த், வி.சாதனா, எம்.தீக்ஸமித்தா, ரா.தரணிக்கா ஸ்ரீ
(14 வயது பிரிவு):
வி.மாதவன், ஆர்.பி.ஆதித்தியன், ஜெ. ரன் ஜெய் சவுமியா தேவி, கே.திஷமிக்கா சாய், எம்.கவிக்ஸா
(பொதுப் பிரிவு):
எஸ்.ஆப்ரஷாம் ஜஸ்டின், எஸ்.ரஞ்சித் ஆனந்த், சவுதீஸ்குமார், ஏ.யோகிதா, ஜெ.சியோனுக்கா, ஆர்.தீக்ஸிதா.

இளம் செஸ் வீரருக்கான பரிசினை வி.எஸ்.வி.தஸ்வந்த் தட்டிச்சென்றார். வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தேனி, சென்னை, மதுரை, திருச்சி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.